TVK Vijay Birthday Celebration | "விலையில்லா விருந்தகம்"விஜய் பிறந்தநாளில் அறிவித்த தவெக மா.செ.

Update: 2025-06-23 06:57 GMT

"விலையில்லா விருந்தகம்"விஜய் பிறந்தநாளில் அறிவித்த தவெக மா.செ.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, நெல்லை கிழக்கு மாவட்டம் சார்பில், மாவட்டச் செயலாளர் ஜாகீர் உசேன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன் தலைமையில், வி.கே.புரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது 51 கிலோ எடையுள்ள கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டு பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன், நெல்லை கிழக்கு மாவட்டத்தில் விரைவில் விலையில்லா விருந்தகம் திறக்கப்பட்டு, தினமும் காலை ஏழைகளின் பசியாற்றப்படும் என உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்