ஒப்பந்தக்கார‌ரை ஆபாசமாக பேசி அரிவாளை ஓங்கிய Ex.MLA

Update: 2025-05-17 15:38 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில், ஒப்பந்தக்காரரை முன்னாள் எம்எல்ஏ ஆபாசமாக பேசியதோடு அரிவாளை ஓங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆவுடையார்கோவிலில் 2 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பில் தீயணைப்பு நிலைய கட்டடம் அமைக்க அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. அறந்தாங்கி காங்கிரஸ் எம்எல்ஏ ராமச்சந்திரன் தொடங்கி வைத்த நிகழ்ச்சியில், திமுக முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் அங்கு வந்தார். தன்னை ஏன் அழைக்கவில்லை என்று ஆத்திரத்தோடு ஒப்பந்த‌க்கார‌ரை தகாத வார்த்தையால் பேசி, தேங்காய் உடைப்பதற்காக கையில் வாங்கிய அரிவாளை ஓங்கி, வெட்டி விடுவேன் என்று கூறும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்