வக்பு வழக்கு தொடர்பான தீர்ப்பை வரவேற்கும் காங்கிர்ஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், வக்பு வாரியம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அவர், இதனைத் தெரிவித்தார்.
மேலும், மும்மொழிக்கொள்கை குறித்த விவகாரம் குறித்து பேசிய அவர், மக்களின் நிலைப்பாடைப் பொறுத்தே மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழும் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.