பிரதமர் மோடி பற்றி ட்வீட் போட்டதால் தேஜஸ்வி யாதவ் மீது FIR - பீகார் அரசியலில் பரபரப்பு
பிரதமர் மோடி குறித்து ஆட்சேபனைக்குரிய பதிவை ட்வீட் செய்ததாக, ஆர்.ஜே.டி மூத்த தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மீது மகாராஷ்ட்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பீகார் மக்களுக்கு பிரதமர் பொய்யான வாக்குறுதிகள் அளித்துள்ளதாக குற்றம்சாட்டி தேஜஸ்வி யாதவ் சில கருத்துக்களை பதிவிட்டதாக புகார் எழுந்தது. மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ மிலிந்த் ராம்ஜி நரோட் Milind Ramji Narote என்பவர், தேஜஸ்வி யாதவ் மீது புகார் அளித்துள்ளார். இதன்பேரில், வெவ்வேறு குழுக்கள் இடையே பகைமையை ஊக்குவித்தல், அவதூறு மற்றும் பொது அமைதிக்கு குழப்பத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ், தேஜஸ்வி யாதவ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.