"பெரியார் பற்றி பேசி பெரிய தலைவராக சீமான் விரும்புகிறார்" - முத்தரசன் விமர்சனம் | Mutharasan

Update: 2025-01-29 02:22 GMT

பெரியார் குறித்து பேசி, தன்னை பெரிய தலைவராக காட்டி கொள்ள சீமான் விரும்புவதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார் பற்றி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுவது புதிதல்ல என்றும், 10 ஆண்டுகளுக்கு முன் திராவிடர் கழக தலைவர் வீரமணியை விட, பெரியாரை பற்றி புகழ்ந்து பேசியவர் சீமான் என்றும் குறிப்பிட்டார். அதனால் சீமான் என்ன வேண்டுமானாலும் பேசட்டும் என முத்தரசன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்