மோடி, அமித்ஷாவை புகழ்ந்து பேசிய ஈபிஎஸ்

Update: 2025-07-09 04:42 GMT

இரண்டாவது நாளாக சுற்றுபயணத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிசாமியின் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்று பயணம் கோவை புளியகுளம் பகுதியில் நடைபெற்றது. அப்போது உரையாற்றிய அவர் அதிமுகவினரும், பாஜகவினரும் நாட்டிற்காக தங்களை முழுவதுமாக அர்பனித்துக்கொண்டு உழைக்கின்றவர்கள், ஆனால் திமுகவினர் சுயநலவாதிகள் என பேசினார். தான் முதலமைச்சராக இருந்த போது என்னென்ன கேட்டேனோ அனைத்தையும் மத்திய அரசு வழங்கியது எனவும், நாங்கள் கேட்டதற்காக 14 மருத்துவ கல்லூரி மருத்துவமனையை மத்திய அரசு வழங்கியது எனவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்