கோவை மேட்டுப்பாளையத்தில் ரோட் ஷோ உடன் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்கினார். மேட்டுப்பாளையம் காந்தி சிலை பகுதியில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் மத்தியில் உரையாற்றினார். இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல் முருகன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.