EPS | "2026-ல் ஈபிஎஸ் தலைமையில் ஆட்சி அமையும்" - மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் உறுதி
எத்தனை சூழ்ச்சிகள் வந்தாலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிபழனிசாமி முதலமைச்சர் ஆவார் என, அக்கட்சியின் மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட அரசிடம் வலியுறுத்துவேன் என அவர் உறுதி அளித்திருப்பதாகவும், டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.