பாஜகவின் மிரட்டலுக்கு அதிமுக பணிந்து செல்லும் நிலையில் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜகவின் உத்தரவிற்கு அதிமுக கட்டுப்படவில்லை எனில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் மாற்றப்படும் நிலை உள்ளதாக கூறினார். மேலும், எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை எனவும் அவர் விமர்சித்தார்.