Election Commission | பைனல் லிஸ்ட் ரிலீஸானது

Update: 2025-10-01 03:26 GMT

பீகார் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு பீகார் சட்டப்பேரவை தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பிறகு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இதுவாகும்.கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.ஜூன் மாதத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் மரணம் அடைந்த வாக்காளர்கள், பீகாரை விட்டு நிரந்தரமாக வெளியேறியவர்கள் என மொத்தம் 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.பிறகு மேலும் 3.66 லட்சம் தகுதியற்ற வாக்காளர்கள் நீக்கப்பட்டதோடு, புதிதாக 21.53 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.அதனை தொடர்ந்து தற்போது இறுதி வாக்காளர்கள் 7.42 கோடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்