பிரியங்கா காந்தி கணவரை சுற்றி வளைக்கும் ED

Update: 2025-04-17 08:46 GMT

மோடி அரசுக்கு எதிராக பேசும்போதெல்லாம் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக, காங்கிரஸ் எம்.பி. பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா குற்றம் சாட்டியுள்ளார். ராபர்ட் வதேராவுக்கு எதிரான பண மோசடி வழக்குகளின் புலன் விசாரணையில் அமலாக்கத் துறை தீவிரம் காட்டி வருகிறது. மூன்று பண மோசடி வழக்குகளில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராபர்ட் வதேரா, இதுபோன்ற விசாரணை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்