`ED வைத்த ஊழல் குற்றச்சாட்டு.. CBI விசாரிக்க வேண்டும்’’ - L முருகன் அழுத்தம்

Update: 2025-10-31 03:24 GMT

நகராட்சி நிர்வாகப் பணியில் ஊழல் புகார் - எல்.முருகன் வலியுறுத்தல்

நகராட்சி நிர்வாகப் பணி நியமனங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ள ஊழல் குற்றச்சாட்டை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகப் பணியாளர் நியமனங்களில் பெரும் அளவில் லஞ்ச ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். ஒவ்வொரு பணி நியமனத்திற்கும் 25 முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை ஆதாரங்கள் வெளியிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை புறக்கணித்து விட்டு, அண்ணா பல்கலைக்கழகம் வழியாக குறுக்கு வழியில் நியமனங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு மவுனம் காப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறை விசாரணை நியாயம் அளிக்காது என்பதால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் இந்த ஊழல் குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்