அமைச்சர் பொன்முடியை கண்டித்து திண்டிவனத்தில் அதிமுக மகளிரணியினர் கோல்ட் விக் அணிந்து கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திராவிடர் கழக நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் சைவ, வைணவம் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து திண்டிவனம் காந்தி சிலை அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், பல பெண்கள் கோல்ட் கலர் விக் அணிந்து கவனத்தை ஈர்த்தனர்.