வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து தி.மு.க கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்காக ஒவ்வொரு கட்சிகள் சார்பிலும் பேனர் அமைக்கப்பட்டிருந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனரால், சலசலப்பு ஏற்பட்டுள்ளது. வருங்கால முதல்வரே எனக் குறிப்பிட்டு திருமாவளவனுக்கு வி.சி.கவினர் பேனர் வைத்திருந்தனர். விசிகவினர் வைத்த இந்த பேனர் கூட்டணி கட்சியினர் இடையே பேசுபொருளாகி உள்ளது.