சென்னை, சேலம் உள்பட பல இடங்களில் அ.தி.மு.கவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் யார் அந்த தம்பி? என்ற கேள்விக்குறியுடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதேபோல் சேலம் மாநகரிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அரக்கோணத்தில் தி.மு.க நிர்வாகியால் கல்லூரி மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், 'டாஸ்மாக் காசு... எந்த தம்பிக்கு போச்சு?' என்ற ஒரு கேள்வியும் போஸ்டரில் கேட்கப்பட்டுள்ளது.