Dmk || நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்கம் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..
சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர். மா.சுப்பிரமணியன், இன்னும் ஓரிரு வாரத்தில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள அவர், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை கொஞ்சம் மெருகேற்றி, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலமாக இலவச முழு உடல் பரிசோதனைகள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.