திருவள்ளூர் மாவட்டம், நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் திமுக பெண் தலைவரின் கணவருக்கும், திமுக கவுன்சிலருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடக்கும் வீடியோ காட்சி வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. நாரவாரிக்குப்பம் பேரூராட்சி தலைவராக தமிழரசி இருந்து வருகிறார். இவரது கணவர் குமார், மற்றும் அதே பகுதியை சேர்ந்த திமுக கவுன்சிலர் கார்த்திக்கிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தற்போது வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.