Diwali Bus | தீபாவளிக்கு பேருந்துகள் எப்படி இருக்கும்.. அமைச்சர் சொன்ன தகவல்
Diwali Bus | தீபாவளிக்கு பேருந்துகள் எப்படி இருக்கும்.. அமைச்சர் சொன்ன தகவல்
தீபாவளிக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகள் இயக்கம்
கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் ஆம்னி பேருந்துகள் மீது தீபாவளிக்கு முன்பாகவே நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து சென்னை, மாதவாரம் வரை செல்லக்கூடிய குளிர்சாதன பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்த அவர், டிசம்பர் மாதத்திற்குள்ளாக வால்வோ பேருந்துகளை தமிழகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தீபாவளி அன்று தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.