Congress | BJP | காங்கிரஸில் இருந்து சசிதரூர் விலகலா? - Shashi Tharoor போட்ட ட்வீட்டால் பரபரப்பு
காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் விமர்சத்தைத் தொடர்ந்து, தனது எக்ஸ் தள பக்கத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் வெளியிட்டுள்ள பதிவு கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பதிவில், வானம் யாருக்கும் சொந்தமாக இல்லை... இறக்கைகள் உங்களுடையதாய் இருக்கும்போது, பறப்பதற்கு யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை... என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவைத் தொடர்ந்து, காங்கிரசில் இருந்து விலகி, பாஜகவில் இணையப்போகிறாரா சசிதரூர் என்று கேள்விகளை எழுப்பி கருத்து தெரிவித்து வருகின்றனர்.