பி.எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டம் தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக தலைமைச் செயலாளர் தமக்கு கடிதம் எழுதியதாக கூறியுள்ள தர்மேந்திர பிரதான் அந்தக் கடிதத்தை மாநிலங்களவையில் வாசித்தார். உண்மை கசக்கதான் செய்யும் என்றும், தமிழகத்தில் பி.எம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவ,, மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசு மிகவும் ஆர்வமாக இருக்கிறது என தலைமைச் செயலாளர் தெரிவித்திருந்ததாகவும், அவர் குறிப்பிட்டார். தமிழக அரசின் எதிர்ப்பும் பிரச்சினையும் தான் என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.