தனக்கு சட்டசபையில் பேசுவதற்கு போதுமான, நேரம் ஒதுக்குவது இல்லை என எம்.எல்.ஏ. வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும், எம்.எல்.ஏவுமான வேல்முருகன் பல உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்புகள் வழங்கப்படும் நிலையில், தனக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுவதால், கட்சியின் பொதுக்குழுவிடம் ஆலோசித்த பிறகே பேரவைக்கு வருவதாக கூறி இருந்தார். இந்த சூழலில், சட்டசபை கூட்டத்தொடரை அவர் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.