''போட்டோஷூட் தான் நடக்கிறது..'' அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம்

Update: 2025-02-23 01:39 GMT

``போட்டோஷூட் தான் நடக்கிறது..'' அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம்

திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் போட்டோ சூட் நடப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார். பெரும்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், திமுக ஆட்சியின் ஒரே சாதனை விலைவாசி உயர்வு, லஞ்சம் லாவண்யம் இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என விமர்சித்தார். மேலும், திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் போட்டோ சூட் நடப்பதாக கூறிய அவர், நாட்டில் புதிதாக வந்துள்ள ஒரு அப்பா, மின் கட்டணம், பால் விலை உள்ளிட்டவற்றை உயர்த்தியதாக விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்