அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம்... நேரில் ஆஜரான 150 பேர்... நாள் குறித்த சிறப்பு நீதிமன்றம்
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கு விசாரணை, சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். கடந்த மாதம் நவம்பர் 25ஆம் தேதி 150க்கும் மேற்பட்டோர் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளித்த நிலையில், இது தொடர்பாக இன்றும் 150 நபர்கள் நேரில் ஆஜராகினர். அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜனவரி 9 ஆம் தேதி ஆஜராக செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.