மும்மொழிக் கொள்கை விவகாரம்: தொண்டர்களுக்கு பரபரப்பு கடிதம் எழுதிய CM MK Stalin | DMK | BJP | HINDI
இன்னுயிர்த் தமிழை எந்நாளும் காப்போம் என தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். கல்வி நிதி விவகாரத்தில், மத்திய அரசு வீண் பிடிவாதம் பிடிப்பதாக குற்றம்சாட்டி உள்ள அவர், தமிழ்நாட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குடும்பத்தினர் வயிற்றில் அடிக்கின்ற படுபாதகச் செயலை செய்திருப்பதாகவும் சாடியுள்ளார். தமிழையும், பிற மாநிலத்தவர்களின் தாய்மொழியையும் மதிக்காமல் இழிவுபடுத்தும் நோக்கத்துடன், மொழித் திணிப்பை வலியுறுத்தும் மக்கள் விரோத மனப்பான்மையுடன் செயல்படும் ஒரே கட்சியாக பாஜக இருப்பதாக குற்றச்சாட்டி உள்ள முதல்வர் ஸ்டாலின், மூன்றாவது மொழி என்ற சுமையை ஏற்றாமல் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தரமான கல்வியை திராவிட மாடல் அரசு அளித்து வருவதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தமிழ் உள்பட 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்கிவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.