CM பினராயி வாகனத்திற்கு முன்..கருப்பு கொடியுடன் பாய்ந்த காங்.,கட்சியினர்

Update: 2025-04-25 02:55 GMT

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் நடைபெற இருந்த நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த கேரள முதல்வர் பினராயி விஜயனின் வாகனத்தை மறித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி காட்ட முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால், காங்கிரஸ் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்