Chennai | Sekar Babu | "தேர்தல் வாக்குறுதி நாங்கள் கொடுத்தோமா?" - அமைச்சர் சேகர்பாபு
Chennai | Sekar Babu | "தேர்தல் வாக்குறுதி நாங்கள் கொடுத்தோமா?" - அமைச்சர் சேகர்பாபு
தேர்தல் வாக்குறுதி நாங்கள் கொடுத்தோமா ? - அமைச்சர் சேகர்பாபு
சென்னை ரிப்பன் மாளிகையில் துப்புரவு தொழிலாளர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், தேர்தல் வாக்குறுதி நாங்கள் கொடுத்தோமா என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சந்தேகத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு,மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,தொழிலாளர்கள் தரப்பில் கோரிக்கைகளை தெரிவித்து உள்ளதாகவும், அரசு தரப்பில் என்ன செய்ய முடியும் என பார்த்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தார்