#BREAKING || தமிழக அமைச்சரவையில் மாற்றம் - வெளியான அதிமுக்கிய தகவல்

Update: 2024-08-23 02:47 GMT

தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையி​ல் தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.பொதுவாக ஆளுநர் மாளிகை நிகழ்ச்சிகள், ஆளுநரின் சந்திப்புகள் குறித்த விவரங்கள் ஆளுநருக்கான செயலாளர் மூலம் முதல் நாள் இரவு 7 மணிக்குள் இறுதி செய்யப்படும். ஆனால், இன்று ஆளுநர் மாளிகையில் எந்த நிகழ்ச்சியும் நடைபெறுவதாக தகவல் இல்லை என ஆளுநர் மாளிகை தரப்பில் தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சனிக்கிழமை டெல்லி புறப்படுகிறார். தலைமைச் செயலாளர் மற்றும் பொதுத்துறைச் செயலாளர் நேற்று மாலை ஆளுநரை சந்தித்திருந்த நிலையில், தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், தற்போது வரை எதுவும் உறுதி செய்யப்படாததால், அமைச்சரவை மாற்றம் தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்