மூன்று மொழிகள் மட்டுமல்ல, ஆந்திராவில் பல மொழிகளை ஊக்கப்படுத்துவோம் என அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தி மொழியை கற்றுக்கொள்வது நல்லது என்றும் அதனால் நாம் மக்களுடன் எளிதில் பழக முடியும் எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தொகுதி மறுவரையறை
விவகாரத்தில் நிலைப்பாட்டை தெரிவிக்க மறுப்பு தெரிவித்தார். தொகுதி மறுவரையறை செய்வது தொடர்பாக தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்றும் யூகங்கள் அடிப்படையில், கருத்து தெரிவிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.