"2035-க்குள்.." - பிரதமர் எடுத்த முடிவு.. சுதந்திர தினத்தில் தடாலடி அறிவிப்பு
அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என்றும், சிந்து நதி இந்தியர்களுக்கு மட்டும் தான் சொந்தம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
செங்கோட்டையில் சுதந்திர தின விழா உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் விடுதலைக்காக எண்ணற்ற வீரர்கள் உயிர் தியாகம் செய்ததாக குறிப்பிட்டார்.
சிந்து நதியில் போதிய தண்ணீரின்றி நமது விவசாயிகள் கஷ்டப்படுவதாகவும்,
விவசாயிகளுக்கு போதிய நீர் கிடைக்காமல் இன்னல்களை அனுபவித்து வந்ததாகவும் தெரிவித்தார்.
சிந்து நதி இந்தியர்களுக்கு மட்டும் தான் சொந்தமானது என தெரிவித்த பிரதமர்,
அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்...
அணு ஆயுத மிரட்டல்களை ஒரு போதும் பொருட்படுத்தமாட்டோம்...
ரத்தமும், நீரும் ஒன்றாக செல்ல முடியாது என குறிப்பிட்டார்