Breaking | Jai Shankar | "இனி இது நடக்கக்கூடாது!" - ஜெய்சங்கருக்கு CM ஸ்டாலின் அதிரடி கடிதம்

Update: 2026-01-03 11:29 GMT

மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்....

மயிலாடுதுறை மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்..

அக்கடிதத்தில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தடையின்றி நடக்கிறது என முதல்வர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்...

தமிழ்நாட்டை சேர்ந்த 251 மீன்பிடி படகுகளும், 73 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் காவலில் உள்ளனர் எனவும், எதிர்காலத்தில் இது போன்ற கைது சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்