திருவிழா நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பொறியாளரை வெட்டி விட்டு தப்பியோடிய பாஜக பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மாரியம்மன் கோயிலில் திருவிழா தொடர்பான கூட்டம் நடத்துவதில் அதே பகுதியை சேர்ந்தவர்களான திருமேனிக்கும் பொறியாளர் செழியனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் பொறியாளர் செழியனை திருமேனி அரிவாளால் வெட்டி விட்டு ஓடியுள்ளார். தலைமறைவாக உள்ள பாஜக ஒபிசி பிரிவு மவட்ட நிர்வாகியான திருமேனியயை போலீசார் தேடி வருகின்றனர்.