சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 6-வது சர்வதேச சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த அவரை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய பாஜக நிர்வாகிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.