கலைஞர் பிறந்த நாள் மாணவர்களுக்கு பிரியாணி - ரூ 500 ஊக்கத் தொகை

Update: 2025-06-03 14:18 GMT

சென்னை புழுதிவாக்கம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு 500 ரூபாய் ஊக்கத் தொகையும், மட்டன் பிரியாணியும் வழங்கப்பட்ட நிகழ்ச்சி, மாணவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புழுதிவாக்கம், 186 வது வார்டு பகுதியில் அமைந்துள்ள பெரியார் அரசு மேல் நிலையப்பள்ளியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவானது மாமன்ற உறுப்பினரும், திமுக வட்டச் செயலாளருமான ஜே.கே.மணிகண்டன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிலையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் கலந்து கொண்ட சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் அரவிந்த் ரமேஷ், பள்ளி மாணவர்கள் 650 பேருக்கு 500 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கினார். மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த, மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையும் வழங்கப்பட்டது. விழாவின் இறுதியில் சுவையான மட்டன் பிரியாணி வழங்கப்பட்ட நிலையில், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்