Bihar Election 2025 Result | பீகாரில் வெற்றி கொண்டாட்டத்திற்கு தயாரான NDA-விற்கு வந்த ஷாக் செய்தி

Update: 2025-11-14 02:13 GMT

பீகாரில் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு அனுமதி கிடையாது என அம்மாநில டிஜிபி வினய்குமார் தெரிவித்துள்ளார். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் படி, எந்த ஒரு அரசியல் கட்சியும், வெற்றியை கொண்டாட அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பலவும் பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று கூறி இருந்த நிலையில், 5 லட்சம் ரசகுல்லாக்கள் , 500 கிலோ லட்டுக்கள் என வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி இருந்ததன.

Tags:    

மேலும் செய்திகள்