``கூட்டணியில் இருப்பதாலேயே அனைத்தையும் ஆதரிக்க முடியாது’’ - சண்முகம் பேச்சு
திமுக கூட்டணியில் இருப்பதால் அனைத்தையும் ஆதரிக்க மாட்டோம் என சிபிஎம் சண்முகம் பேச்சு
சேலத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தொழிலாளர் நலனை பாதிக்கும் வகையில் அரசு செயல்பட்டால், அதை எதிர்க்க வேண்டியது கம்யூனிஸ்டுகளின் வர்க்க கடமை என்று கூறினார். தங்கள் வர்க்க கடமையை விட்டுக் கொடுத்து விட்டு, அரசியல் உறவு எப்படி சாத்தியமாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
முரண்படுவதும், உடன்படுவதும் சேர்த்தது தான் கூட்டணியே தவிர, அனைத்தையும் ஆதரித்து பேசுவது, கூட்டணியின் நிலைப்பாடு அல்ல என்றும் அவர் கூறினார்.