வங்கதேசத்தில் தற்போது ஆட்சியிலிருக்கும் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்கெனவே இடஒதுக்கீடு சீர்திருத்தத்தை வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக அவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றுவரும் சூழலில், தற்போது நாட்டின் தற்போதைய அரசைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக ஷேக் ஹசீனா மீதும் அவருடன் தொடர்புடைய 72 பேர் மீதும் டாக்கா தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.