ஆம் ஆத்மிக்கு அடுத்த அடி.. 8 MLA-க்கள் திடீர் ராஜினாமா - டெல்லி அரசியலில் சலசலப்பு
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய 8 எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைந்தனர். வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ள டெல்லியில் மும்முனைப் போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில், மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட 18 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களில் 8 பேர், திடீரென ஆம் ஆத்மியில் இருந்து விலகியது டெல்லி அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கெஜ்ரிவால் மீது நம்பிக்கையை இழந்துவிட்டதாக தெரிவித்த ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், கட்சியிலிருந்து விலகிய அடுத்த நாளே பாஜகவில் இணைந்துள்ளனர்.