சமையல் சிலிண்டர் விலை உயர்வு - அண்ணாமலை சொன்னது என்ன?

Update: 2025-04-08 09:23 GMT

கியாஸ் சிலிண்டருக்கு மானியம் கொடுப்பதாக அறிவித்து திமுக ஏமாற்றிவிட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கியாஸ் சிலிண்டரின் விலை தொடர்ச்சியாக குறைந்து வந்துள்ளதாக தனது பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கியாஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் கொடுப்பதாக அறிவித்து நான்கு ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் திமுக நீலிக்கண்ணீர் வடிப்பதாக விமர்சித்து முதலமைச்சர் ஸ்டாலினை டேக் செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்