அண்ணாமலை பேசுவது வடிகட்டியபொய் - அமைச்சர் விமர்சனம்
நெல்லை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் குழந்தை இறந்துள்ளதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வடிகட்டிய பொய்யை கூறுவதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவ நிபுணர்களின் முன்னிலையில் தான் குழந்தைக்கு சோதனை நடைபெற்றதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.