அன்புமணியை புறக்கணித்த ராமதாஸ்
இரண்டு நாளில் அடுத்தடுத்து அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் மற்றும் ராமதாஸ் தலைமையில் மகளிர் மாநாடு நடந்தது அக்கட்சியினர் மத்தியில் குழப்பத்தையும், சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில், தந்தை ராமதாசை அன்புமணி புகழ்ந்தாலும், அவரை சுற்றி சில "குள்ளநரி கூட்டம்" இருப்பதாக விமர்சித்திருந்தார். மேடையில் ராமதாசுக்காக ஒரு இடம் காலியாக வைக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவர் வரவில்லை என்றும் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து ராமதாஸ் தலைமையில் பூம்புகாரில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில், அன்புமணியின் புகைப்படம் கூட இடம் பெறவில்லை. மாநாட்டில் பேசிய ராமதாஸ், “மற்றவர்கள் சொல்வதை காதில் வாங்க வேண்டாம், நான் சொல்வதுதான் நடக்கும் என்று அன்புமணியை சாடியவாறு பேசினார். இந்த பரஸ்பர புறக்கணிப்பும், மறைமுக விமர்சனங்களும், பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பேரும் சமரசம் செய்து கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வரும் நிலையில், இது போன்ற முரண்பாடுகள் தொடர்ந்து நீடித்து வருகிறது.