Vaiko Speech| ``மீண்டும் மக்கள்நல கூட்டணியா?’’ - சட்டென மாறிய வைகோ முகம்
திமுகவுடனான கூட்டணியில் மதிமுக உறுதியாக உள்ளதாக வைகோ பதில்
திமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு 2017-இல் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். ஈரோட்டில் மதிமுக பொதுக்குழுக்கூட்டம் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுன் ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுசெயலாளர் வைகோ , முதன்மை செயலாளர் துரை வைகோ , மல்லை சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, வரும் தேர்தலில் மதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது தெரியும் என்று தெரிவித்தார். மீண்டும் மக்கள் நல கூட்டணி ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.