LED இருசக்கர வாகன பேரணியை துவங்கி வைத்த அதிமுக மா.செ. SM சுகுமார்

Update: 2025-08-19 07:10 GMT

ராணிப்பேட்டையில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த எல்.இ.டி. இருசக்கர வாகன பேரணியை ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயண நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்ற உள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்த பொதுமக்களிடையே குறிப்பாக கிராமப்புறங்கள் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுற்றுப்பயணம் குறித்து வாசகங்கள் அடங்கிய எல்.இ.டி. இருசக்கர வாகன பேரணியை முத்துக்கடை பேருந்து நிலையத்திலிருந்து ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம். சுகுமார் தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் ஐ.டி.விங்கை சேர்ந்த இளைஞர்கள் பலர் பங்கேற்று தங்கள் டூவீலரிகளில் எல்.இ.டி. மின்விளக்கு பொருத்தப்பட்ட பேனர்களை கட்டிக்கொண்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்