ADMK | அறிவித்தது தேர்தல் ஆணையம் - ``அதிமுக இதை முழு மனதுடன் வரவேற்கிறது’’

Update: 2025-10-28 04:47 GMT

"S.I.R-ஐ அதிமுக வரவேற்கிறது" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

S.I.R எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை அதிமுக முழு மனதுடன் வரவேற்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் ஆணையம் இந்த திருத்தப் பணிகளை வெளிப்படையாகவும், முறையாகவும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.

மாநில அரசு அலுவலர்கள் நடுநிலையுடன் செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் நீக்கப்பட்டு, உண்மையான வாக்காளர்களுக்கே வாக்களிக்கும் உரிமை கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக வேண்டுகோள்

"சிறப்பு வாக்காள திருத்தப் பணிகளை வெளிப்படையாக நடத்த வேண்டும்"

"மாநில அரசு அலுவலர்கள் நடுநிலையுடன் செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்க"

"உண்மையான வாக்காளர்களுக்கே வாக்களிக்கும் உரிமை கிடைக்க வேண்டும்"

Tags:    

மேலும் செய்திகள்