"வெளிநாட்டில் சிக்கி தவித்த சுமார் 2,400 தமிழர்கள் மீட்பு" | அமைச்சர் நாசர் அறிவிப்பு

Update: 2025-04-29 13:22 GMT

கடந்த 4 ஆண்டுகளில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்று சிக்கித் தவித்த சுமார் இரண்டாயிரத்து 400-க்கும் மேற்பட்ட தமிழர்கள் மீட்கப்பட்டதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் அயலக தமிழர் நலத்துறை மானியக்கோரிக்கையில் பேசிய அவர், கடந்த 4 ஆண்டுகளில் வேலைக்காக சென்று வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் சிக்கித்தவித்த சுமார் இரண்டாயிரத்து 400 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், வெளிநாடுகளுக்கு பணி நிமித்தமாக சென்று, எதிர்பாராத விதமாக உயிரிழந்த சுமார் ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட தமிழர்களின் உடல்கள், தாயகம் கொண்டுவரப்பட்டு அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்