பிளேக் மாரியம்மன் கோயில் சாமி சிலை உடைப்பு - அண்ணாமலை கண்டனம்
கோவை சின்னியம்பாளையத்தில் சாமி சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகள் உடனடியாக பிடிக்கப்பட வேண்டும் என தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிளேக் மாரியம்மன் கோயிலில், சிலைகள் உடைப்பிற்கு தனது கண்டனங்களை பதிவு செய்துள்ள அவர், சம்மந்தப்பட்ட சமூக விரோதிகளை கைது செய்து, அவர்களின் பின்னணியை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வலியுறுத்தியுள்ளார்.