தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் நாசர் துறை சார்ந்த பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மானியக் கோரிக்கையில் பேசிய அவர், வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான 4 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், இலங்கை தமிழர் முகாம்களில் கணினி வசதியுடன் கூடிய படிப்பகம் அமைக்கப்படும் எனவும், அயலக தமிழர் மருத்துவ சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று உயிரிழந்த, வறுமை நிலையில் உள்ள அயலக தமிழர் நலவாரிய உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.