10,11ம் வகுப்பு - மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் தேதி அறிவிப்பு

Update: 2025-05-16 10:20 GMT

10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19ம் தேதி மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரவர் பள்ளிகள் அல்லது தேர்வுத் துறை இணையதளத்தில் இருந்து மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்... மேலும் விடைத்தாள் நகல் பெறுவதற்கு வரும் 20ம் தேதி முதல், 24ம் தேதி வரை அந்தந்த பள்ளிகள் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான உடனடி தேர்வுகள் ஜூலை 4ம் தேதி முதல் நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 53 ஆயிரத்து 978 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்