"இந்தி நமது அடையாளம்" - பிரதமர் மோடி வாழ்த்து
உலக அரங்கில் இந்தி மொழிக்கு அதிகரித்து வரும் மரியாதை நம் அனைவருக்கும் பெருமை மற்றும் உத்வேகத்தை கொடுப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.. இந்தி மொழி நாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தி என்பது வெறும் தொடர்பு ஊடகம் மட்டுமல்ல, அது நமது அடையாளம் மற்றும் கலாச்சாரத்தின் வாழும் பாரம்பரியம் என்று குறிப்பிட்டுள்ளார்.. ஹிந்தி உட்பட அனைத்து இந்திய மொழிகளையும் பலப்படுத்துவதிலும், அவற்றை அடுத்த தலைமுறையினருக்கு பெருமையுடன் எடுத்துச் செல்வதற்கும் நாம் அனைவரும் உறுதிமொழி எடுப்போம் என்றும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.