இந்த வருட தீபாவளியையொட்டி சூர்யா துவங்கி பிரதீப் ரங்கநாதன் வரை பல நட்சத்திரங்களின் திரைப்படங்கள் பட்டாசாக வெளியாகின்றன. அதில் சூர்யா நடித்து ஆர் ஜே பாலாஜி இயக்கும் கருப்பு திரைப்படமும், விக்னேஷன் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லைஃப் இன்ஸூரன்ஸ் கம்பெனி திரைப்படமும், மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரமின் பைசன் திரைப்படமும், லெஜண்ட் சரவணனின் இரண்டாவது படமும் வெளியாகிறது. சூர்யா நடித்த திரைப்படங்கள் தொடர் தோல்வியை சந்தித்த நிலையிலும், ஆர் ஜே பாலாஜியின் கடைசி இரு திரைப்படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில் இந்த இருவரின் காம்போ வெற்றிப்பெறுமா என ரசிகர் காத்திருக்கின்றனர்.