காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (25.08.2025) | 9 AM Headlines | ThanthiTV

Update: 2025-08-25 04:08 GMT
  • கொடநாட்டில் நின்ற போது 'மிஸ் ஜெயலலிதா ஜெயராமன்' என சொல்லி இருப்பீர்களா? இப்போது சொல்ல முடியுமா?மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று அழைத்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்...
  • திருச்சி துறையூரில் ஈபிஎஸ் பங்கேற்ற பிரச்சார கூட்டத்திற்குள், ஆம்புலன்ஸ் வந்த‌தால், அதிமுகவினர் தடுத்து நிறுத்தி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது...
  • கடந்த ஜூன் மாதம் நடந்த குரூப் 4 தேர்வில் மிகப்பெரிய குளறுபடி நடந்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்...
  • எனக்கு வாய்ப்பளித்தால் அரசியலமைப்பை பாதுகாக்க முழுமையாக போராடுவேன் என்று சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார்...
  • அரசியலமைப்பு, வேற்றுமையில் ஒற்றுமை போன்ற இந்தியாவின் தனித்துவமான காரணிகள் மீது நம்பிக்கை கொண்டவர் சுதர்சன் ரெட்டி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..புதிய கல்விக்கொள்கைக்கு எதிரான தமிழ்நாட்டின் உணர்வுகளை வெளிப்படுத்தியவர் சுதர்சன் ரெட்டி என்றும் புகழாரம் சூட்டினார்...
  • இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழ்நாடு வருகை தந்தார்...முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்களை சந்தித்து ஆதரவு கோரினார்...
  • தமிழகத்தில் ஆகஸ்ட் 30ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது....
  • DRDO, தனது புதிய வான்பாதுகாப்பு ஆயுத சோதனையை ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக நடத்தியுள்ளது...எதிரி விமானங்கள் மற்றும் ட்ரோன்களை விரைவாக தடுக்க இந்தியாவின் வான்வழி பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக இது தயாரிக்கப்பட்டுள்ளது..
  • ககன்யான் திட்டத்திற்கான விண்கலத்தை பாதுகாப்பாக காற்று இறக்கம் செய்யும் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தியுள்ளது..பாராசூட் உதவியுடன் விண்கலத்தை பாதுகாப்பாக கடலில் விழச்செய்து சோதனை நடத்தப்பட்டது...
  • போலி சான்றிதழ்கள் கொடுத்து கல்வித்துறையில் ஆசிரியர்கள், ஊழியர்கள் பணிபுரிவதாக தகவல் வெளியான விவகாரம்...நடப்பாண்டிற்குள் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களை சோதனை செய்து அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது..
  • பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வில் 7 ஆயிரத்து 964 இடங்கள் நிரம்பின...நடப்பாண்டில் 33 ஆயிரத்து 752 இடங்கள் காலியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன...
  • வங்கி, நிதி நிறுவனங்கிளல், முதல்முறையாக கடன் கேட்டு விண்ணப்பிப்போருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் அல்ல...சிபில் ஸ்கோர் இல்லை எனக் காரணம் காட்டி, கடன் வழங்க மறுக்கக் கூடாது எனவும் நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது...
  • தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காது...ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஆய்வு கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது...
Tags:    

மேலும் செய்திகள்